கேரளாவில் நிபா வைரஸ்க்கு ஒரு இளைஞர் பலியானதையடுத்து, தமிழக - கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக் குழுக்களை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.