பள்ளி பாடத்திட்ட மாற்றம் தற்போதைக்கு கிடையாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்...சென்னை கோட்டூர்புரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இருக்கக் கூடாது என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளோம்.கிருஷ்ணகிரி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் விவகாரத்தை பொருத்தவரையில் அது தற்போது காவல்துறையினருக்கு சென்று விட்டது காவல்துறை விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆசிரியர்கள் மூலமாக மாணாக்கர்களுக்கு நாங்கள் ஆலோசனைகள் விழிப்புணர்வு செய்து வருகிறோம்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிந்து தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.அரசு பள்ளியை தனியார் பள்ளி எந்த பள்ளியாக இருந்தாலும் உங்கள் பள்ளியில் குழந்தைகளுக்கு ஏதாவது துன்புறுத்தல் தவறு நடைபெற்றால் தைரியமாக அதனை வெளியில் கொண்டு வாருங்கள் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். தனியார் பள்ளிகள் இதனால் உங்களுடைய பள்ளியின் பெயர் கெட்டுப் போய்விடும் என பயந்து விடாதீர்கள்...தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பெற்றோர்களுக்கு உங்கள் பள்ளியின் மீது நம்பிக்கை ஏற்படும் ...அடுத்த ஆண்டு பள்ளிகள் வித்துறையில் பாடதிட்டம் மாற்றப்படுமா அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு தற்போதைக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார்