காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா நகர சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவின் புறநகர் பகுதியான அல்-ஜெய்டவுனில் (( al-Zeitoun )) உள்ள சஃபாத் பள்ளி (( Safad School )) மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த தாக்குதலில் போர் காரணமாக இடம்பெயர்ந்து வந்து தங்கிருந்த 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.