Also Watch
Read this
கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி.. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
8 பேர் பலி என தகவல்
Updated: Sep 01, 2024 06:46 AM
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் உள்ள மொகல்ராஜபுரம் பகுதியில் இடைவிடாத கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்தன. இதில் 15 வீடுகள் தரைமட்டமானதில் வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் SDRF மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மழையால் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
((விஜயவாடா, ஆந்திரா
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved