நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த நிலையில் சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கெங்கரையிலிருந்து குராக்கரை பகுதிக்கு நடந்து சென்ற விஜயராஜ் என்பவரை காட்டுயானை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோத்தகிரி காவல்நிலைய போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.