புதுச்சேரியில் யூடியூப் வீடியோ பார்த்து கலர் ஜெராக்ஸ் மெஷின் மூலம் 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்ததாக, இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருபுவனை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் என்ற அந்த நபர், பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மதுபானம் வாங்கியபோது, சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார்.