தருமபுரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து தெலுங்கானாவிற்கு அழைத்து சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வர் என்ற இளைஞர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, தாம் வேலை செய்யும் தெலுங்கானாவிற்கு அழைத்து சென்றார்.