சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில், விளைநிலங்களுக்குள் கூட்டமாக புகுந்த காட்டுப்பன்றிகள் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், காட்டுப்பன்றிகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.