தென்காசி மாவட்டத்தில் இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்? என காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனிநாடார் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை கொண்டு வரக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பலமுறை மனு அளித்துள்ளதாக கூறினார். அண்மையில் முதலமைச்சர் தென்காசிக்கு வந்த போது, இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை அறிவிக்காதது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.