news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜயை விளாசிய சாட்டை
tv

Also Watch

tv

Read this

விஜயை விளாசிய சாட்டை

நாதக - தவெக மோதலால் பதற்றம்

84

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேனி மாவட்டம், பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், வழக்கம்போல விஜயை விமர்சித்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தவெகவினர் கூட்டத்திற்குள் புகுந்து கூச்சலிட, தவெகவினரின் கார் கண்ணாடியை நாதகவினர் உடைத்து மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

விஜயை விமர்சித்து வீடியோ
நாதகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் சீமானுடன் நெருங்கி பயணித்து வருபவருமான சாட்டை துரைமுருகன், தனது யூடியூப் சேனலில் விஜய்யையும், தவெகவையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். விஜய் உரை எப்போதெல்லாம் வெளியாகிறதோ, அடுத்த சில மணி நேரத்தில் சாட்டை துரைமுருகன் யூடியூப் பக்கத்தில் விஜயை விமர்சித்து வீடியோ வெளியாகும்.

"தேனி மாவட்டத்திற்கு வந்து பாரு"
இப்படி சாட்டை துரைமுருகனின் நக்கல், நய்யாண்டி பேச்சால், ஆத்திரமடைந்த தவெக ஆதரவாளர்கள் பலரும் சாட்டை துரைமுருகனுக்கு சோசியல் மீடியாவில் மிரட்டல் விடுத்து வந்தனர். இதில், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டியும் ஒருவர். "தேனி மாவட்டத்திற்கு வந்து பாரு" என சாட்டை துரைமுருகனுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

கூட்டத்திற்கு இடையூறு
இந்நிலையில், தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் நாதக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது த.வெ.க தலைவர் விஜய் குறித்தும், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி குறித்தும் கொச்சையாக விமர்சித்தார். அண்ணனின் பேச்சில் சிலாகித்துபோன தம்பிகள், கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தவெகவினர், கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது.

காரை சிறைபிடித்து வாக்குவாதம்
அண்ணன் எப்போ கிளம்புவார் என்பது போல் காத்திருந்த தம்பிகள், சாட்டை துரைமுருகன் அந்த பக்கம் புறப்பட்டதும், இந்த பக்கம் தவெகவினரின் காரை சிறைபிடித்து வாக்குவாதம் செய்ததோடு கார் கண்ணாடியை உடைத்ததால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

போலீசில் புகார், தவெக மீது வழக்கு
இதையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார், இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இடையூறு செய்த தவெகவினர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தவெகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Link
தொடர்ந்து உயரும் தங்கம் விலை

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
42 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved