news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews என்ன என்ன மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது?
tv

Also Watch

tv

Read this

என்ன என்ன மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது?

சென்னை

16

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாசு 1

தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 1,256 முகாம்கள் நிறைவு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கடந்த 2.08.2025 தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வந்த நிலையில்
நேற்றுடன் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் 1,256 நிறைவு பெற்றதாகவும் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் 63 வெவ்வேறு நாட்களில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என கூறிய அமைச்சர் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள ஊரக, குடிசை பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

எங்கெங்கு எத்தனை முகாம்கள் நடத்தப்பட்டது?

நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்பு உடையவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாம்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றது? எங்கெங்கு எத்தனை முகாம்கள் நடத்தப்பட்டது? இதன் மூலம் எத்தனை பேர் பயணடைந்தனர்? என பட்டியிலிட்டார்.

1. முகாம்களில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவை வழங்கப்பட்டது

2. முழு உடல் பரிசோதனையானது நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் செயல்படுத்தப் பட்டது.

3. 388 வட்டங்களில் தலா 3 முகாம்கள் வீதம் 1,164 முகாம்களும், பெரு நகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தலா 1 முகாம் வீதம் 15 முகாம்களும் நடத்தப்பட்டது.

4. 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் (கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருப்பூர்) தலா 4 முகாம்கள் வீதம் 20 முகாம்கள் நடத்தப்பட்டது

5. 10 லட்சத்திற்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 முகாம்கள் வீதம் 57 முகாம்கள் நடத்தப்பட்டது.

6. 27.02.2026 நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் 63 வெவ்வேறு நாட்களில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

7. மகத்தான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் மூலம் 18,52,561 நபர்கள் (சராசரியாக ஒரு முகாமிற்கு 1,475 நபர்கள் வீதம்) மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும் இந்த முகாம்கள் மூலம் என்ன மருத்துவசேவைகள் வழங்கப்பட்டது என பட்டியலிட்டார்.

1. உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டவர்கள் 4,28,454

2. சர்க்கரை நோய் கண்டறியப்பட்டவர்கள் 1,50,708

3. சிறுநீரக நோய்க்கான உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் 46,409

4. இரத்த சோகை கண்டறியப்பட்டவர்கள் 66,251

5. புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 222

6. கண்புரை நோய் கண்டறியப்பட்டு மேற்கொள்ளப்பட்டவர்கள் 8,401 அறுவை சிகிச்சை

7. காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 595

8. இருதய நோய் பிரச்சனை கண்டறியப்பட்டவர்கள 1,626

9. நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, குடலிறக்கம் போன்ற பல்வேறு நோய்கள் கண்டறியப்பட்டவர்கள் 3,877

என மொத்தம் 7,06,543 நபர்கள் உயர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Link
நஷ்டம் உங்களுக்குத்தான்...

நஷ்டம் உங்களுக்குத்தான்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி

6
41 mins agoshare
இபிஎஸ் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved