புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆட்டு சந்தை களை கட்டியது. புரட்டாசி மாதம் தொடங்கியது முதல் போச்சம்பள்ளி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து வெகுவாக குறைந்திருந்தன. இந்நிலையில், ஐப்பசி பிறந்து தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, சந்தைக்கு ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வம் காட்டிய நிலையில், அடுத்த வாரம் ஆடுகள் வரத்து இன்னும் கூடுதலாக இருக்கும் என்ற வியாபாரிகள் மழையால் சேரும் சகதியுமாக உள்ள சந்தையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.