மக்களின் வாக்குகளை திருடும் பாஜகவோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டு சேர்ந்து கொண்டு மௌனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாஜகவுடன் மூழ்கும் கப்பலில் எடப்பாடி பழனிசாமியும் வரும் சட்டமன்ற தேர்தலில் மூழ்குவார் என சாடினார்.