ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய விநாயகரை யானை ராமலட்சுமி வணங்கியதை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து ரசித்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகரை, கோவில் யானை ராமலட்சுமி, தனது தும்பிக்கையை தூக்கி வழிபட்டது. பின்னர், திருவீதியுலா வந்த விநாயக பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.