news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

கொடைக்கானல், திண்டுக்கல்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL KDL Bison

காட்டெருமை தொல்லை :

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குருசாமி பள்ளம் அருகே நேற்று காட்டெருமை குதிரையை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கபட்ட குதிரைக்கு போதிய மருத்துவம் பார்க்கவில்லை என்றும் காலை முதல் தொடர்ந்து அரசு மருத்துவர் மற்றும் வனத்துறையினர் யாரும் வரவில்லை என்றும்.

தொடர்ந்து இந்த பகுதியில் காட்டெருமைகள் அட்டூழியம் அதிகரித்து வரும் நிலையில் வன துறையினர் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சாலையில் அமர்ந்து
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பகல் நேரங்களில் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவதால் பள்ளி குழந்தைகள் முதியவர்கள் பெரும் அச்சத்துடன் சென்று வருவதாகவும், விவசாய தோட்ட
பணிகளுக்கு செல்ல முடியாமல் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறுகின்றனர்.

இது குறித்து பலமுறை வனத்துறையினரிடம் தெரிவித்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத வனத்துறையினரை கண்டித்து 30 கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பந்தபட்ட அதிகாரிகள் வரும் வரை சாலைமறியலை கைவிடபடாது என்று கூறி வருவதால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது .

Related Link
தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
6 hrs 27 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved