விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சுந்தரராஜபுரம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.