நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். கூடங்குளத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி விஜயா, தனது மாமனாரின் பெயரில் உள்ள ஒன்றரை சென்ட் வீட்டு மனை பட்டாவை கணவர் பாஸ்கர் பெயரில் மாற்றுவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்திருந்தார். இந்த மனு குறித்து விசாரணை மேற்கொண்ட, கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலன் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கவே, விஜயா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார்.இதையும் படியுங்கள் : தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் திடீர் மரணம் முகம் வீங்கி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த மாணவன்