ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் திடீரென முகம் வீங்கி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாமரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் - தீபா தம்பதியின் மகன் மிதுன், காவனூர் அருகே உள்ள யோகி வேமனா என்கிற தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் உணவருந்திய பிறகு கொண்டு வந்த கேக்கை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு சென்ற மிதுன், சிறிது நேரத்தில் முகம் வீங்கி மயங்கி விழுந்தான். உடனே, பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மாணவன் உயிரிழந்தான். முதல்கட்ட விசாரணையில், மிதுன் சாப்பிட்ட கேக் 5 நாட்களுக்கு முன்பு வாங்கியது என தெரியவந்துள்ளது.