Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 04:16 PM
By: Manigandan Raja

கார்க் தீவு மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா :
ஈரானின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கார்க் ((Kharg)) தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் பேரலுக்கு 102 புள்ளி 44 டாலர்களாக விலை உயர்ந்தது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 104 புள்ளி 79 டாலர்களாக விலை உயர்ந்து வர்த்தகமானது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரால் பாரசீக வளைகுடாவில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து அடியோடு முடங்கிய நிலையில், அதன் விலையும் அதிகரித்து வருகிறது.
கார்க் தீவு ஈரானின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானது என்பதால் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் கட்டமைப்புகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved