news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டில் அனுமதிக்க மறுக்கிறார் விஜய் - சங்கீதா புகார் மனு
tv

Also Watch

tv

Read this

வீட்டில் அனுமதிக்க மறுக்கிறார் விஜய் - சங்கீதா புகார் மனு

சங்கீதா நீதிமன்றத்தில் புதிய மனு

102

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.

நீலாங்கரை வீட்டில் சம உரிமை உண்டு - சங்கீதா
விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும், தமக்கு சம உரிமை இருக்கிறது என்றும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவாகரத்து மனு
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். குறிப்பாக, வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.

பேசு பொருளான திருமண நிகழ்ச்சி
சங்கீதாவின் குற்றச்சாட்டுகளும், விவாகரத்து மனுவும், பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருமண நிகழ்வில் நடிகை த்ரிஷா உடன் இணைந்து ஒரே நிற பட்டாடையில் விஜய் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது, பேசு பொருளானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

“வீட்டில் என்னை அனுமதிக்க வேண்டும்”
விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விவாகரத்து வழக்கு முடியும் வரை, தன்னை, சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் தங்கியிருக்கும் வீட்டில் தனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது என்றும் சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல் வருகிறது...
விவாகரத்து முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க வேண்டும், நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பினர் மிரட்டுவதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த முதல் மனுவில் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வீடு தான் தங்களது திருமண வாழ்க்கையின் முக்கியமான இல்லமாக இருப்பதாகவும், வழக்கு முடிவடையும் வரை அங்கு தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு மாற்றாக, சமமான வசதி கொண்ட மற்றொரு வீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் கோரியுள்ளார்.

அடுத்த பரபரப்பு
நடிகர் விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றதாகவும், திருமண உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை விரைவில் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. சங்கீதாவின் புதிய மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்கள், பரபரப்பை அதிகரித்துள்ளது.


Related Link

"மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி

0
3 mins agoshare
நீலகிரி யானை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved