திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்களில் லாரிகளில் வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் பணி மறைமுகமாக நடந்து வருவதாகவும், இதனால், விளைச்சல் அதிகமாக உள்ளதாக பதிவு செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் நெல் கொள்முதல் செய்வதில், மூட்டைக்கு 40 ரூபாய் தர வேண்டியுள்ளதாகவும், வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.