மீனவர்கள் போராட்டம் : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் மீனவர் பகுதி மற்றும் உய்யாலி குப்பம் மீனவர் பகுதி அருகருகே அமைந்துள்ளது, உயாளி குப்பம் மீனவர் பகுதிக்கு பொதுவான 4.30 ஏக்கர் நிலம் உள்ளது, அந்த இடத்தில் மூன்று ஏக்கரில் கோயில் மற்றும் 3 சாலைகள் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள 1.30 ஏக்கர் இடத்தில் புதுப்பட்டினம் மீனவர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்காளம்மன் கோயிலை கட்டி வழிபட்டு வருகின்றனர், இந்நிலையில், உய்யாலி குப்பம் மீனவர்கள் பயன்படுத்தி வரும் 3 ஏக்கர் நிலமும் எங்களுக்கு தான் சொந்தம் என புதுப்பட்டினம் மீனவர்கள் உரிமை கோரியதால்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவாக வட்டாட்சியர் நடந்து கொள்வதாகவும் இவர்களுக்கு ஆதரவாக காவல்துறையும் நிற்பதாகவும் உய்யாலி குப்பம் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.வரும் திங்கட்கிழமை மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ள நிலையில் இந்த இடம் தொடர்பாக இரு மீனவ குப்பங்களுக்கிடையே பெரிய மோதல் உண்டாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் வட்டாட்சியர் ஒரு தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொள்வதை கண்டித்து. இன்று உய்யாலி குப்பம் மீனவர்கள் 300க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேட்டியளித்து அவர்கள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு அரசு தீர்வு காணவில்லை என்றால் சாலை மறியல் மற்றும் கடலில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாகவும் மிக முக்கியமாக வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். Related Link நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லஞ்சம்