சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உண்மைக்கு புறம்பான தகவலை அளித்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்தார்.அப்போது புதர்மண்டி கிடப்பதை அகற்ற கோரிய மனு குறித்து கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட பகுதியை சுத்தப்படுத்தியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசன் பதிலளித்தார். பின்னர் மனு அளித்தவரை அமைச்சர் உதயநிதி, தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது அவர் மறுத்துள்ளார். இதையடுத்து பணியை முறையாக செய்யாததாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசனை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.