திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த 9 கிலோ கஞ்சாவை பதுக்கியதாக, ரயில்வே போலீசார் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.ஜோலார்பேட்டை ரயில் நிலைய காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சந்துரு, மணிகண்டன் என்ற இரு காவலர்கள், பிளாட் பாரத்தில் ரோந்து சென்றபோது கண்டெடுத்த கஞ்சா பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் பதுக்கியதாக கூறப்படுகிறது.இதுதொடர்பான புகாரின் பேரில், ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் விசாரணை நடத்தியதில், காவலர்கள் இருவரும் கஞ்சாவை பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இரு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.