குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.மகேஷ் என்பவர் நடத்திவரும் டியூசன் சென்டரில், 7-ஆம் வகுப்பு மாணவியிடம் டியூசன் ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மகேஷை சிறையில் அடைத்தனர்.