திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் விபத்து இல்லாமல் வாகனம் இயங்க வேண்டி கருப்பணசாமி கோயிலில் பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கினர். கணவாய்பட்டியில் உள்ள கணவாய் கருப்பணசாமி. கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக வாகனங்களுக்கு டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் பூஜை செய்து ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். அதே போல் இந்த ஆண்டும், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பக்தர்களுக்கு அசைவ விருந்து அளித்தனர்.