Also Watch
Read this
Posted on: Aug 17, 2025 12:12 PM
By: Web Team

திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை சேர்ந்த 54 பேரை, போலீசார் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின் படி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நன்னிலம், பேரளம் உட்பட மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள், வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் குறித்து அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார், 54 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் 1500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved