சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பூமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்ட 14 காளைகளை 126 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். போட்டியில் வென்ற வீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.