Also Watch
Read this
திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல்
Updated: Sep 13, 2024 09:45 AM
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
27 கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தினமும் தமிழக, கர்நாடகா மாநிலங்களுக்கிடையே ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், காலை 6 மணிக்கு காரப்பள்ளம், பண்ணாரி பகுதிகளில் உள்ள இரண்டு சோதனைச் சாவடிகளில் ஒரே நேரத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் வனத்துறையினர் அனுமதியின்றி சில கனரக வாகனங்களை அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved