தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழிகளின் மேல் அமைக்கப்பட்ட கூரை சேதமடைந்துள்ளதால் மழைநீர் கசிந்து முதுமக்கள் தாழிகள் சேதமடையும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டு தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம், இரும்பு, வெண்கலப் பொருட்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. அவற்றை பாதுகாக்க அமைக்கப்பட்ட கூரைகள் சேதமடைந்துள்ள நிலையில், குழிக்குள் மழைநீர் செல்லாதவாறு தற்காலிகமாக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.