விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போலீசாரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். நெசவாளர் காலனி எதிரே ரயில் நிலையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞர்களை, ரோந்துப் பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது போலிசாரை அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் மூவரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் உரிய முறையில் நடத்திய விசாரணையில் அவர்கள் அருப்புக்கோட்டையை சேர்ந்த அஜித்குமார், நெல்லையை சேர்ந்த மாரிசெல்வம் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்தது.