புதுக்கோட்டை மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் தன்னை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்ல காதல் கணவன் முயற்சிப்பதாக கர்ப்பிணி பெண் புகார் அளித்துள்ளார். கல்லம்பட்டி பகுதியை சேர்ந்த வளர்மொழி என்ற பெண், ஆர்.பாலக்குறிச்சியை சேர்ந்த அஜய் பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள வளர்மொழியை கருவை கலைத்துவிட்டு தன்னைவிட்டு பிரிந்து செல்லுமாறு கூறி அடிப்பதாக புகார் அளித்துள்ளார்.