news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கணவனை ஏமாற்றி விட்டு பணத்தை சுருட்டி சென்ற மனைவி
tv

Also Watch

tv

Read this

கணவனை ஏமாற்றி விட்டு பணத்தை சுருட்டி சென்ற மனைவி

ராமசாமிபுரம், தூத்துக்குடி

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT CHEATING

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(35). இவர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பழம் வியாபாரம் செய்து வருகிறார்.

பாஸ்கருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பாஸ்கருக்கு தெரிந்த ஒருவரின் மூலம் சாத்தான்குளத்தை சேர்ந்த திருமண புரோக்கர் மூக்காண்டி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

இதையடுத்து மூக்காண்டி, நாகர்கோவிலை சேர்ந்த பெண் திருமண புரோக்கர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த ஆதரவற்ற இளம் பெண் உள்ளதாக கூறி, ஒரு இளம் பெண்ணின் புகைபடத்தை பாஸ்கரிடம் காட்டி திருமணம் செய்து கொள்கிறீர்களா என கேட்டுள்ளனர்.

பாஸ்கர் தனக்கு பெண் கிடைத்த சந்தோசத்தில் ஆதரவற்ற பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை தான் திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த
புரோக்கர்கள் ரூ.40 ஆயிரம் தரவுக்கூலியாக பாஸ்கரிடமிருந்து பெற்றுள்ளனர்.

பின்னர் திருமணத்திற்கு தயாரான பாஸ்கர் ஆதரவற்ற இளம் பெண்ணை திருமணம் செய்யும் ஆசையில் அவருக்கு தேவையான சேலை, சுடிதார், நைட்டி உள்ளிட்ட ஆடைகள் என ரூ.10
ஆயிரத்திற்கு புதிய வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் பாஸ்கர் கடந்த 20-ந் தேதி காலை திருச்செந்தூர் சிவன் கோவில் பின்புறம் உள்ள துர்க்கை அம்மன் கோவில் முன்பு அந்த இளம் பெண் கழுத்தில் 4 கிராம் தங்க
தாலியை கட்டி எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் பாஸ்கர் தனது வீட்டிற்கு இளம்பெண்ணை அழைத்து வந்துள்ளர்.

தொடர்ந்து 2 நாட்கள் அந்த இளம்பெண் பாஸ்கருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 22-ந் தேதி காலை அண்ணன் வீட்டிற்கு வருவதாக கூறி இறைச்சி சமைப்பதற்கு
தேவையான பொருட்களை வாங்கி வரும்படி அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் பாஸ்கர் திருச்செந்தூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி இல்லாததை கண்டு பாஸ்கர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் புதிதாக வாங்கிய துணிகளையும் காணவில்லை.

மனைவியை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், தனக்கு பெண் பார்த்து வைத்த தரகர் மூக்காண்டியை தொடர்பு கொண்டு பேசியள்ளார்.

மேலும் அவரிடம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாஸ்கர் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
வைகுண்ட வாசல் பெருமாள் கோவில் ரத சப்தமி திருவிழா

வைகுண்ட வாசல் பெருமாள் கோவில் ரத சப்தமி திருவிழா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
2 hrs 23 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved