கோவை மாட்டம் வால்பாறையில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளின் சுவர்கள் நனைந்து காணப்படுகிறது. இதில், காமராஜர் நகரில் வசித்து வரும் சுப்பிரமணி - மல்லிகா தம்பதியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.