நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இரவில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அரவேணு பெரியார் நகர்பகுதியில் சிறுத்தை உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், விரைந்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.