சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக மறுகால் பாய்வது, காண்போரின் கண்களை கவரும் வகையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஏரியூர் அருகே கழுங்குப்பட்டியில் உள்ள இந்த ஏரி, 338 நீர்ப் பாசன ஆயக்கட்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் 3 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு பெரிய கண்மாய். தொடர் மழை காரணமாக, கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அருவி போல் பாயும் மறுகாலில் பொது மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.மேலூர், கீழவளவு வழியாக எருமைப்பட்டி, ஒப்பிலான்பட்டி வந்து, ஏரியூர் கழுங்குப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி, கழுங்கு வழியாக தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குற்றாலம், மூணாறு போன்ற இடங்களுக்கு சென்று, குளிப்பது போன்று ஆர்ப்பரித்து அருவிபோல் கொட்டும் தண்ணீரில், பொது மக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்திலேயே ஏரியூர் அருகே கழுங்குப்பட்டி ஏரி, சுமார் 227 ஏக்கர் பரப்பளவுள்ளது. முதன் முதலாக மறுகால் பாய்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரையில் படர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி, கரையை பலப்படுத்தவேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையும் பாருங்கள்; ஏங்க...ஏரியூர் கண்மாய்க்கு வாங்க..! | Sivagangai News