விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்ற நீதிபதி இளவசரன் தீர்ப்பு வழங்கினார்.