நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி கூட்டத்தில் தனது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் எந்த வித பணியும் செய்யவில்லை என திமுக பெண் கவுன்சிலர் கண்ணீர் விட்டு அழுதார். மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுசிலா தலைமையில் நடைபெற்ற நிலையில், 30-வது வார்டு கவுன்சிலர் காவேரி, தனது வார்டில் எந்த பணிகளும் செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாக வேதனை தெரிவித்தார்.