தாம்பரம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து சாலையில் அறுந்து விழுந்த மின் ஒயர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது விழுந்ததில், அவர் பதறியபடி வாகனத்தை கீழே போட்டு உயிர்தப்பினார். இதில் இளைஞரின் கையில் காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.