news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மஞ்சுவிரட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு
tv

Also Watch

tv

Read this

மஞ்சுவிரட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு

வார்பட்டு - புதுக்கோட்டை

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDK Protest

நிர்வாகம் அனுமதி மறுப்பு :

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்ட டு கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.

ஆனால் பாதுகாப்பு காரணத்திற்காக இந்த வருடம் மஞ்சுவிரட்டு போட்டியை நடத்த புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வார்பட்டு கிராமத்தில் நடைபெறும் பாரம்பரிய மஞ்சுவிரட்டை நடத்த உடனடியாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கோரி வார்ப்பட்டு சுற்றுவட்டார பகுதி சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் வாடிவாசல் அமைக்கப்பட்ட நிலையில் மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததோடு மஞ்சுவிரட்டுக்கு காளைகள் கொண்டு வருபவர்கள் மீது வழக்கு பதியப்படும் என காவல்துறையினர் ஒலி பெருக்கி அறிவித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தங்களுக்கு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி வார்பட்டு பொதுமக்கள் பொன்னமராவதி-சிங்கம்புணரி சாலையில் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னமராவதி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Link
கணக்கு பார்க்க வந்ததாக ஊழியர் மழுப்பல்

கணக்கு பார்க்க வந்ததாக ஊழியர் மழுப்பல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 30 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved