திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. அதே சமயம் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.