திருவள்ளூர் அருகே சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை கண்டதும் ஓட்டுநர் அஜித், உடனே ஓரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நிலையில், தீ பரவி கார் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.