news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பின்னால் வந்த வாகனம் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார்
tv

Also Watch

tv

Read this

பின்னால் வந்த வாகனம் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார்

தியாகராய நகர், சென்னை

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Car accident

கட்டுப்பாட்டை இழந்த கார் :

அண்ணா நகரை சேர்ந்த சந்திரன் தனது குடும்பத்தினருடன் காரில் உஸ்மான் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அன்பழகன் மேம்பாலம் பகுதியில் மேம்பாலத்தின் மேல் செல்லலாமா அல்லது கீழே செல்லலாமா என்ற குழப்பத்தில் அவர் காரை மெதுவாக இயக்கியதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு வாகனம் அவரது காரை மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் சுவரில் மோதி பலத்த சேதமடைந்தது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சந்திரனின் உறவினருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.விபத்து காரணமாக உஸ்மான் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அன்பழகன் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்களை தற்காலிகமாக மாற்றி, பாண்டி பஜார் சாலை வழியாக திருப்பி அனுப்பினர்.இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
பரோட்டா கடனாக கேட்டு போதை ஆசாமிகள் அட்ராசிட்டி

பரோட்டா கடனாக கேட்டு போதை ஆசாமிகள் அட்ராசிட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துருவ நட்சத்திரம் வழக்கின் தீர்ப்பு குறித்து கௌதம் பதிவு

0
15 mins agoshare
Dhuruva natchathiram








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved