Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சூறாவளி காற்று காரணமாக செவ்வாழை தோட்டத்தில் இருந்த ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எம்.குறும்பபட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது செவ்வாழை தோட்டத்தில் இருந்த ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும் வீட்டின் மேற்கூரை மற்றும் மாட்டு கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved