news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தண்ணி விடச்சொன்னா ஏட்டிக்கு போட்டியா பேசுறாங்க...
tv

Also Watch

tv

Read this

தண்ணி விடச்சொன்னா ஏட்டிக்கு போட்டியா பேசுறாங்க...

தூத்துக்குடி

94

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ktr main

கயத்தாறு அருகே அருந்ததியர் சமுதாயத்தை வஞ்சிப்பதாகவும் குடி தண்ணீரில் பாகுபாடு பார்ப்பதாகவும் அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். நான்கு நாட்களாக தண்ணீர் வரவில்லை தண்ணீர் டேங்கையும் பல வருடங்களாக சுத்தப்படுத்தவில்லை அப்படியே தண்ணீர் வந்தால் புழு பூச்சிகளுடன் பாசி படிந்து தண்ணீர் வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
ஆத்திகுளம் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வராததை கண்டித்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பல வருடங்களாக சுத்தம் செய்யாததை கண்டித்தும் கிராமத்தினர் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சில மாதங்களாகவே தொடரும் தண்ணீர் பிரச்சனை
சில மாதங்களாகவே இது போன்று தண்ணீர் பிரச்சனைகள் தொடர்ந்து தங்கள் பகுதியில் நடந்து வருகிறது தண்ணீர் ஆப்பரேட்டரிடம் ஏன் தண்ணீர் வரவில்லை எனக் கேட்டால் எங்கள் சௌகரியத்துக்கு தான் நாங்கள் தண்ணீர் திறந்து விடுவோம் எனவும் மிரட்டும் நோக்கில் செயல்படுவதாகவும், அப்படியே தண்ணீர் திறந்து விட்டால் மதிய வேலைகளில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

குடிநீர் பம்பு ஆபரேட்டரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை
உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் குடிநீர் பம்பு ஆபரேட்டரை உடனடியாக பணிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்டோர் கையில் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர்.

Related Link
ஒரு குடம் குடிநீருக்காக ஓடும் பொதுமக்கள்

ஒரு குடம் குடிநீருக்காக ஓடும் பொதுமக்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
6 hrs 21 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved