மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, தங்கச் சிவிகையில் உபயநாச்சியருடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கூடலழகர் தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்ப மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைத் தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாள் தெப்பத்தை 3 முறை வலம் வந்தார்.