தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவேங்கடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக இருக்கும் டேவிட் மைக்கேல் என்பவர் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் கன்னியாகுமரியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் டேவிட் மைக்கேலை கைது செய்தனர்.