news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இளம்பெண்ணிடம் அத்துமீறிய டெய்லர்
tv

Also Watch

tv

Read this

இளம்பெண்ணிடம் அத்துமீறிய டெய்லர்

சென்னை

27

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chn(3)

சென்னை கொடுங்கையூரில் பெண்ணுக்கு பா*யல் தொல்லை கொடுத்த தையல் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் துணி தைக்க தையல் கடைக்கு சென்ற பொழுது தையல் கடைக்காரர் சையத் இணையத்துல்லா (38) என்பவர், துணிக்கு அளவு எடுப்பது போல் பாவனை செய்து பெண்ணுக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை கொடுங்கையூர் காவல்துறையினர் இணையத்துல்லாவை கைது செய்தனர்.

இளம்பெண்ணிடம் அத்துமீறிய டெய்லர்
வியாசர்பாடி பி. வி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா, இவருடைய இளைய மகளை மகாகவி பாரதி நகர் அருகே உள்ள ஒரு தையல் கடைக்கு துணி தைப்பதற்காக அழைத்துச் சென்றதாக தெரிய வருகிறது. அப்பொழுது அந்த கடையை பார்த்த இந்த 19 வயது இளம்பெண் நான் இந்த கடையில் துணி தைத்துக் கொள்ள மாட்டேன் என தனது தாயிடம் கூறியுள்ளார். அதற்கு சுலோச்சனா ஏன் இந்த கடையில் துணி தைக்க வேண்டாம் என்று கூறுகிறாய் காரணம் சொல்லு? என கேட்ட பொழுது நான் வீட்டில் வந்து அது குறித்து கூறுகிறேன் என தனது தாயை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாக தெரிகிறது.
அளவெடுப்பதுபோல் பா*யல் சிண்டல்
இந்த நிலையில் வீட்டிற்கு வந்தவுடன் சுலோச்சனா அந்த கடை குறித்து மீண்டும் அந்த 19 வயது தனது மகளிடம் கேட்ட பொழுது அதற்கு அந்த பெண் அந்த கடையில் ஏற்கனவே தான் ஒரு முறை துணி தைப்பதற்காக சென்ற பொழுது அந்த தையல் கடைக்காரர் துணிக்கு அளவெடுப்பது போல் என்னிடம் பா*யல் சீண்டலில் ஈடுபட்டார் என கூறினார்.

இளம்பெண்ணின் தாயார் போலீசில் புகார்
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுலோச்சனா சம்பந்தப்பட்ட அந்த தையல் கடைக்காரர் சையத் இணையத்துல்லா அவரிடம் சென்று தனது மகளுக்கு நேர்ந்த அநீதி குறித்து நியாயம் கேட்ட பொழுது தையல் கடைக்காரர் ஒரு வித ஒருமையில் சுலோச்சனாவை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிய வருகிறது. இதனை அடுத்து இது குறித்து சுலோச்சனா சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்
டெய்லர் இணைய்த்துல்லா கைது
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த சென்னை கொடுங்கையூர் காவல்துறையினர் இளம் பெண்ணின் தாயாரை அவதூறாக பேசியதற்காக தையல் கடைக்காரர் சையத் இணையத்துல்லாவை கைது செய்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
அண்டா கொடுத்த திமுக...

அண்டா கொடுத்த திமுக...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிகமாக குறைந்தது தங்கம் விலை - யாரும் எதிர்பாரா இன்ப அதிர்ச்சி

0
11 mins agoshare
தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved