கும்பகோணத்தில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பாமக சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது. அசூர் புறவழிச்சாலையில் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பல முறை புகார் அளித்தும், அரசு அப்புறப்படுத்த முன்வராததால் தஞ்சை பாமக சார்பில் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது.