Also Watch
Read this
By: Fyrose Banu

நான்காம் நிலை D - கிரேடு ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

இந்நிலையில் இன்று மதியம் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved